சிம்புவின் ‘மாநாடு’க்கு தேதி குறித்துவிட்டார்கள்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 25-ஆம் தேதி துவங்குகிறது!

செய்திகள் 8-Jun-2019 12:19 PM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. ‘வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் துவங்க இருக்கிறது என்றும் இந்த படத்திற்கு இசை அமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் தேதியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதில் வருகின்ற 25-ஆம் தேதி ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் துவங்க இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன் நடிக்க, விஜய்குமார், சுப்பு பஞ்சு ஆகியோரும் இடம் பெறுகிறார்கள். அரசியல் கலந்த படமாக உருவாகும் ‘மாநாடு’ படத்திற்காக சிம்பு சமீபத்தில் லண்டன் சென்று தனது உடல் எடையை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#STR #Maanaadu #KalyaniPriyadarshan #VenkatPrabhu #SureshKamatchi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;