19 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கும் பிரபலம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 19 ஆண்டுகளுக்கு பிறகு தர்பார் படத்தில் நடிக்கிறார் ஸ்ரீமன்!

செய்திகள் 7-Jun-2019 2:09 PM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் ‘தர்பார்’. லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இந்த படத்தில் ரஜினி, நயனதார ஆகியோருடன் யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உட்பட பலர் நடித்து வரும் நிலையில் நடிகர் ஸ்ரீமனும் இப்படத்தில் இணைந்துள்ளார். இது குறித்து ஸ்ரீமன் ட்வீட் செய்திருப்பதில், ‘’19 வருடங்களுக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என் சினிமா வாழ்க்கையில் முதன் முதலாக ‘லெஜெண்ட்’ ஒரே ஒரு சூபபர் ஸ்டாரான ரஜினிகாந்த் படத்தில் நடிக்கிறேன். மேலும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவன தயாரிப்பில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் நடிப்பது மகிழ்ச்சி’’ என்று குறிப்பிட்டுள்ளாட். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் படமான ‘தீனா’ படத்தில் ஸ்ரீமன் நடித்திருந்தார். 2001-ல் வெளியான இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளார் ஸ்ரீமன்.

#Rajini #Darbar #Sriman #ARMurugadoss #Anirudh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தும்பா ட்ரைலர்


;