சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்த பிரபலம்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்!

செய்திகள் 6-Jun-2019 12:40 PM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். ஏற்கென்வே சிம்பு நடித்த மன்மதன், வல்லவன், வானம், சிலம்பாட்டம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் முதலான படங்களுக்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜா இப்போது ‘மாநாடு’ மூலம் மீண்டும் சிம்புவுடன் இணைந்துள்ளார். அரசியல் கலந்த படமாக உருவாகும் ‘மாநாடு’ படத்திற்காக சிம்பு சமீபத்தில் லண்டன் சென்று தனது உடல் எடையை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன் நடிக்கிறார் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.

#Simbu #KalyaniPriyadarshan #VenkatPrabhu #STR #Maanadu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;