நடிகர் சங்க தேர்தல் – ‘பாண்டவர் அணி’ வேட்பாளர்கள் பட்டியல்!

வருகின்ற 23-ஆம் தேதி  நடைபெற இருக்கும் நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் போட்டியிடுபவர்கள் விவரம்!

செய்திகள் 5-Jun-2019 5:54 PM IST Top 10 கருத்துக்கள்

நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வருகின்ற 23-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. சென்னை சத்யா ஸ்டூடியோ வளாகத்திலுள்ள எம்.ஜி.ஆர்.ஜானகி கலைக்கல்லூரியில் இத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில், நடிகர் சங்கத்தில் இப்போது பதவி வகித்து வரும் ‘பாண்டவர் அணி’ சார்பில் போட்டியிட இருப்பவர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் கீழே வருமாறு,

நடிகர் சங்க தலைவர் பதவிக்கு இப்போது அந்த பதவியில் இருந்து வரும் நாசர் மீண்டும் போட்டியிடுகிறார். துணைத் தலைவர்கள் பதிவிகளுக்கு பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் ட்டியிடுகின்றனர். பொது செயலாளர் பதவிக்கு இப்போது அந்த பதவியை வகித்து வரும் விஷால் மீண்டும் போட்டியிடுகிறார். பொருளாளர் பதிவிக்கும் இப்போது அதே பதிவியை வகித்து வரும் கார்த்தி போட்டியிடுகிறார்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஸ்ரீமன், பசுபதி, ரமணா, நந்தா, ‘தளபதி’ தினேஷ், சோனியா போஸ், குட்டி பத்மினி, கோவை சரளா, பிரேம். ராஜேஷ், மனோபாலா, ஜெரால்டு, காளிமுத்து, ரத்னாப்பா, எம்.ஏ.பிரகாஷ், அஜய் ரத்தினம், பிரசன்னா, ஜூனியர் பாலையா, ஹேமசந்திரன், குஷ்பு, லதா, நித்தின் சத்யா, ‘பருத்திவீரன்’ சரவணன், ஆதி, வாசுதேவன், காந்தி காரைக்குடி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் தவிர்த்து இத்தேர்தலில் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;