‘யோகி’ பாபுவுடன் களமிறங்கும் விமல்!

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிக்கும் ‘களவாணி-2’ ஜூன்  28-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 5-Jun-2019 1:47 PM IST Top 10 கருத்துக்கள்

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா ஆகியோர் நடித்து 2010-ல் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘களவாணி’. சமீபகாலமாக வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகி வரும் நிலையில் ‘களவாணி’யின் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய சற்குணமே இரண்டாம் பாகத்தையும் இயக்க, முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியாவே இரண்டாம் பாகத்திலும் கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளனர். அத்துடன் இவர்களுடன் ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கறுப்பு ஆகியோரும் நடிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளா. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் அனைத்து வேலைகளும் முடிவடைந்த ‘களவாணி-2’ படத்தை இம்மாதம் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்து அதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதே தினம் ‘யோகி’ பாபு நடிக்கும் ‘தர்மபிரபு’ படமும் வெளியாக இருக்கிறது. இதனால் யோகி பாபுவும், விமலும் ஒரே நாளில் களம் இறங்க இருக்கிறார்கள்.


#Vimal #Oviya #Kalavani2 #YogiBabu #Dharmaprabhu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பெட்ரோமாக்ஸ் ட்ரைலர்


;