கேமியோ கேரக்டரில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

நாகார்ஜுனா நடிக்கும் ‘மன்மதுடு-2’ தெலுங்கு படத்தில் கேமியோ கேரக்டரில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

செய்திகள் 5-Jun-2019 1:38 PM IST Top 10 கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான ‘சீமராஜா’, ‘சாமி-2’, ‘சண்டக்கோழி-2’, ‘சர்கார்’ முதலான படங்களை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ‘மரைக்கார்’. பிரியதர்சன் இயக்கி வரும் மலையாள படமான இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அஜய் தேவ்கனுடன் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை கடந்த ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த ‘பதாய்ஹோ’ படத்தை இயக்கிய அமித் ஷர்மா இயக்குகிறாராம். இந்த ஹிந்தி படத்திற்காகதான் கீர்த்தி சுரேஷ் தனது எடையை குறைத்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மெலிந்த உடலமைப்புடன் இருப்பது மாதிரியான புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகவும் செய்தது.அதனால் தமிழில் எந்த படத்தையும் கமிட் செய்யாமல் இருக்கும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நாகார்ஜுனா நடிக்கும் ‘மன்மதுடு-2’ படத்தில் ஒரு கேமியோ கேரக்டரில் நடிக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது. இந்த தகவலை ‘மன்மதுடு-2’ படத்தை இயக்கி வரும் நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உறுதிபடுத்தி உள்ளார். ராகுல் ரவீந்தார் கீர்த்தி சுரேஷ் குறித்து ட்வீட் செய்திருப்பதற்கு பதிலளித்துள்ள கீர்த்தி சுரேஷ், ‘நன்ரி ராகுல், நாகார்ஜுனாவுடன் சிறப்பு தோற்றத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். இதனால் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் நாகார்ஜுனாவுடன் ரகுல்ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் தவிர சமந்தாவும் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Manmadhudu2 #RakulPreetSingh #Nagarajuna #KeerthySuresh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவ் தமிழ் - ட்ரைலர்


;