‘அருவி’ இயக்குனருடன் சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் புதிய தகவல்கள்!

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் மூன்றாவது படத்தின் புதிய அதிகாரபூர்வ தகவல்கள்!

செய்திகள் 4-Jun-2019 11:21 AM IST Top 10 கருத்துக்கள்

‘கனா’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’. இந்த படம் இம்மாதம் 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது மூன்றாவது தயாரிப்பாக ‘அருவி’ பட இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறார். இது குறித்த தகவலை நேற்று வெளியிட்டிருந்தோம். அதனை தொடர்ந்து இந்த படத்தில் பணியாற்ற இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இந்த படத்தில் இசையமைப்பாளராக பிரதீப் விஜய், படத்தொகுப்பாளராக ‘அருவி’ படத்தொகுப்பாளர் ரேமண்ட் டெரிக் க்ரஸ்டா, ஒளிப்பதிவாளராக ஷெல்லி, ஸ்டண்ட் மாஸ்டராக திலீப், பாடலாசிரியராக குட்டி ரேவதி ஆகியோர் பணிபுரிய இருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படத்தில் இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அயோக்யா ட்ரைலர்


;