ரிலீஸ் தேதி குறித்த ‘கொலைகாரன்’

விஜய் ஆண்டனி, அர்ஜுன் இணைந்து நடிக்கும் ‘கொலைகாரன்’ வருகிற 7-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 3-Jun-2019 5:29 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனியும், அர்ஜுனும் முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம் ‘கொலைகாரன்’. தியா மூவீஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் தயாரித்துள்ள இந்த படத்தின் விநியோக உரிமையை தனஞ்சயனின் ‘பாஃப்ட்டா’ நிறுவனம் வாங்கியுள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தை இம்மாதம் 5-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ’கொலைகாரன்’ 7-ஆம் தேதிதான் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்சாரில் U/A’ சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுனுடன் ஆஷிமா நர்வால், நாசர், சீதா, குருசோமசுந்தரம், மயில்சாமி உட்பட பலர் நடித்துள்ளனர். சைமன் கே. கிங் இசை அமைத்துள்ளார். முகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

#VijayAntony #Arjun #Kolaigaran # AshimaNarwal

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் - ட்ரைலர்


;