சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ புதிய தகவல்!

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படம் பற்றிய புதிய தகவல்!

செய்திகள் 3-Jun-2019 4:06 PM IST VRC கருத்துக்கள்

‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘ஹீரோ’. KJR STUDIOS நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை துவங்கியுள்ளனர் ‘ஹீரோ’ குழுவினர். இந்த படப்பிடிப்பு ‘ஹீரோ’வுக்கான ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்புடன் துவங்கியுள்ளது. இந்த பாடல் காட்சி நடன இயக்குனர் சதீஷ் நடன அமைப்பில் படமாகி வருகிறது. இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் கல்யாணி பிரியதர்சன் கதாநாயகியாக நடிக்க இன்னொரு நாயகியாக ‘நாச்சியார்’ பட புகழ் இவானா நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

#Sk #SivaKarthikeyan #Sathish #PSMithran #Arjun #YuvanshankarRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;