சென்னை அம்பத்தூரில் ஜீவா, நவ்தீப் மோதல்!

சென்னை அம்பத்தூரில் ரத்தின சிவா இயக்கும் ‘சீரு’ படத்திற்காக ஜீவா, நவ்தீப் மோதல்!

செய்திகள் 3-Jun-2019 3:53 PM IST VRC கருத்துக்கள்

ஜீவா நடிப்பில் ‘ஜிப்ஸி’, ‘கொரில்லா’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன! இந்நிலையில் ராஜசேகரன் இயக்கத்தில் ஜீவாவும் அருள்நிதியும் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத படம். ‘றெக்க’ படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘சீரு’ ஆகியவற்றின் படப்பிடிப்பு வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஐசரி கணேஷின் ‘வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரிக்கும் ‘சீரு’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, கும்பகோணம், மாயாவரம் ஆகிய இடங்களில் நடந்து முடிந்ததை தொடர்ந்து இப்போது அம்பத்தூர் தொழில் பேட்டையில் இப்படத்திற்கான ஒரு சண்டை காட்சியின் படப்பிடிப்பு படு விறுவிறுபாக நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் ஜீவாவும், நவ்தீபும் படு பயங்கரமாக மோதும் காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் கணேஷ் மேற்பார்வையில் படமாக்கி வருகிறார்கள். இந்த படப்பிடிப்புடன் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து விடுமாம்.

‘சீரு’ படத்தில் ஜீவாவுடன் அறிமுகம் ரியா சுமன் கதாநாயகியாக நடிக்கிறார். டி.இமான் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தை ஆக்ஸ்ட் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.

#Jiiva #Seeru #Navdeep #Gorilla #Gypsy #RathinaShiva

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;