அமாலாபால் படத்திற்கு ‘A’ சர்டிஃபிக்கெட்!

அமலா பால் நடிக்கும் ஆடை படத்திற்கு சென்சாரில் ‘A’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 3-Jun-2019 3:43 PM IST Top 10 கருத்துக்கள்

‘ராட்சசன்’ படத்தை தொடர்ந்து அமலா பால் ‘ஆடை’, ‘அதோ அந்த பறவைப்போல’ மற்றும் சில மலையாள படங்களில் நடித்து வருகிறார். இதில் ’ஆடை’ படத்தை ‘மேயாத மான்’ படத்தை இயக்கிய ரத்தின குமார் இயக்கியுள்ளார். அமலா பால கதையின் நாயகியாக நடிக்கும் ‘ஆடை’ படத்தின் அனைத்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் முடிவடைந்த நிலையில் இப்படம் சமீபத்தில் சென்சார் குழுவினரின் பார்வைக்குச் சென்றது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்தில் ஆபாச காட்சிகளும், வன்முறை காட்சிகளும் நிறைய இடம் பெற்றுள்ளது என்று கூறி படத்திற்கு ‘A’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இதனால் படக்குழுவினர் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்துள்ளனர். காரணம் ‘A’ சர்டிஃபிக்கெட் படம் என்றால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பாரக்க முடியும் என்பதோடு இது போன்ற படங்கள் தொலைக்காட்சியில் திரையிடுவதற்கான வாய்ப்பும் இல்லை.

பெண் ஒருவர் ஆடையில்லாமல் ஒரு இடத்தில் மாட்டிக்கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள படமாம் ‘ஆடை’. சென்ற ஆண்டு (2018) செப்டம்பர் 4-ஆம் தேதி வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிலேயே அம்லாபால் படு கவர்ச்சியாக தோற்றமளிக்க, இந்த ஃபர்ஸ்ட் லுக் பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வி.ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் விஜி சுப்பிரமணியன் தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#AmalaPaul #Aadai #MeyaadhaMaan #RathnaKumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆடை ட்ரைலர்


;