ஜீவனின் ‘அசரீரி’

‘ஜெயிக்கிற  குதிரை’ படத்தை தொடர்ந்து ஜீவன் நடிக்கும் படம் ‘அசரீரி’

செய்திகள் 3-Jun-2019 2:42 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் ஜி.கே.இயக்கத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்க, ’பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கும் படம் ‘அசரீரி’. இந்த படம் அறிவியல் புனைவு த்ரில்லர் ரக படமாக உருவாக இருக்கிறது. இயக்குனர் ஜி.கே. ‘அசரீரி’ என்ற பெயரில் ஒரு குறும்படத்தை இயக்கி இருந்தார். அதனை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் இந்த படம், அறிவியல் எவ்வாறு ஒரு குடும்பத்திற்குள் ஒரு உணர்ச்சிப் போராட்டத்தை உருவாக்குகிறது என்பதை மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறதாம். ஜீவன் இதுவரை நடித்த படங்களில் இருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் ஜி.கே.

இந்த படத்திற்கு நீரவ்ஷா, சரவணன் ஆகியோரிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ஐ.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கத்தை வைரபாலன் கவனிக்கிறார். இவர்கள் தவிர இப்படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வுகள் நடந்து வருகிறது. அந்த தேர்வுகள் முடிந்ததும் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது. சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜீவன் நடிக்கும் படம் ‘ஜெயிக்கிற குதிரை’. இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;