இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பி.!

‘தமிழரசன்’ படத்திற்காக இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய மெலடி பாடல்!

செய்திகள் 1-Jun-2019 3:09 PM IST VRC கருத்துக்கள்

விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் ‘தமிழரசன்’. பாபு யோகேஸ்வரன் இயக்கி வரும் இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்திற்காக இளையராஜா இசையில் ஒரு சில வருடங்களுக்கு பிறகு கே.ஜே.யேசுதாஸ் ஒரு பாடலை பாடினார். இந்நிலையில் இப்படத்திற்காக இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் ஒரு மெலடி பாடலை பாடியுள்ளார். பழனி பாரதி எழுத ‘வா வா என் மகனே…’ என்று துவங்கும் தாலாட்டு பாடலான இப்பாடலின் பதிவு இன்று நடந்தது.

ஒரு காலத்தில் நிறைய ஹிட் பாடல்களை தந்த கூட்டணி இளையராஜா எஸ்.பி.பாலசுப்பிரமணி கூட்டணி!@ ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரல் கேட்க முடியாத சூழல் இருந்து வந்தது. இப்போது அந்த சூழல் மறைந்து இருவரும் இணைந்துள்ளனர். அதனை தொடர்ந்து ‘தமிழரசன்’ படத்திற்காக இளையராஜா இசையில் பாடலை பாடியுள்ளார் எஸ்.பி.பால்சுப்பிரமணியம். இந்த பாடல் ஹிட்டாகும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

‘எஸ்.என்.எஸ்.மூவீஸ்’ நிறுவனம் சார்பில் கௌசல்யா ராணி தயாரிக்கும் ‘தமிழரசன்’ படத்தில் விஜய் ஆண்டனியுடன் ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, ராதாரவி, சோனு சூட், யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

#Ilayaraja #SPB #Vijayantony #RamyaNambessan #Thamilarasan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் - ட்ரைலர்


;