சசிகுமார் நடிப்பில் உருவாகும் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படம்!

சசிகுமார் நடிப்பில் உருவாகும் இன்வெஸ்டெகேஷன் த்ரில்லர் படம் குறித்த தகவல்கள்!

செய்திகள் 30-May-2019 12:57 PM IST VRC கருத்துக்கள்

‘மாப்பிள்ளை’, ‘மீகாமன்’, ‘டிட் டிக் டிக்’ உட்பட பல படங்களை தயாரித்த நேமிசந்த ஜபக், ஹிதேஷ் ஜெபக் இப்போது தயாரித்து வரும் படம் ‘பொன்மாணிக்கவேல்’. இந்த படத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தை தொடர்ந்து நேமிசந்த் ஜபக், சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் என்ற தகவலை நேற்று வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படம் குறித்த மேலும் பல விவரங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ள்னர். இந்த படத்தை மலையாளத்தில் ‘காலேஜ் டேஸ்’, ‘காஞ்சி’, ‘டியான்’ ஆகிய படங்களை இயக்கிய ஜி.என்.கிருஷ்ணகுமார் எழுதி இயக்குகிறார் என்றும் இந்த படத்தில் ‘உறியடி’ படத்தில் கதாநாயகியாக நடித்த மானசா ராதாகிருஷ்ணன் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் தகவலை வெளியிட்டிருப்பதோடு இப்படத்தில் குரு சோமசுந்தரம், வித்யா பிரதீப், அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமரன், சுஜாதா, மஞ்சுபெத்து ரோஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள் என்ற தகவலையும் பகிர்ந்துள்ளனர். ]

இந்த படத்தில் சசிக்குமார் சஸ்பென்ட் செய்யப்பட்ட போலீஸ்காரகாக நடிக்கிறார் என்றும் இந்த படம் விறுவிறுப்பாக பயணிக்கும் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்கு ரோனி ராப்பில் இசை அமைக்க, எஸ்.கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். கே.ஜி.வெங்கட்ராமன் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்கத்தை சிவகுமார் யாதவ் கவனிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.



#SasiKumar #GuruSomasundaram #ManasaRadhakrishnan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;