சசிகுமார் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு!

தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி நடித்த படங்களை தயரித்த நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் சசிகுமார் நடிக்கும் படம்!

செய்திகள் 29-May-2019 4:19 PM IST VRC கருத்துக்கள்

‘மாப்பிள்ளை’, ‘மீகாமன்’, ‘டிட் டிக் டிக்’ உட்பட பல படங்களை தயாரித்த நேமிசந்த ஜபக், ஹிதேஷ் ஜெபக் இப்போது தயாரித்து வரும் படம் ‘பொன்மாணிக்கவேல்’. ஏ.சி.முகில் செல்லப்பன் இயக்கி வரும் இந்த படத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தை தொடர்ந்து நேமிசந்த் ஜபக், ஹிதேஷ் ஜெபக் தயாரிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்கள் தயாரிக்கும் அடுத்த படம் இவர்களது 14-ஆவது படமாகும். இந்த படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். என்ற தகவலை மட்டும் வெளியிட்டுள்ள படக்குழுவினர் இப்படத்தின் இயக்குனர், கதாநாயகி, இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர் முதலான விஷயங்கள் குறித்த தகவல்களை விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.

#SasiKumar #SasiKumarNext #NemichandJhabak

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;