‘பிரேமம்’, ‘கொடி’ படங்கள் புகழ் அனுபமா பரமேஸ்வரனின் புதிய அவதாரம்!

உதவி இயக்குனராக பணியாற்றும் ‘பிரேமம்’, ‘கொடி’ படங்கள் புகழ் அனுபமா பரமேஸ்வரன்!

செய்திகள் 29-May-2019 1:00 PM IST Top 10 கருத்துக்கள்

அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் புகழ் பெற்றவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். ‘பிரேமம்’ படத்தை தொடர்ந்து அதன் தெலுங்கு ரீ-மேக்கிலும் நடித்த அனுபமா பரமேஸ்வர்ன் தமிழில் அறிமுகமான படம் ‘கொடி’. துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரண்டு கேரக்டர்களில் நடித்த இந்த படத்தில் த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து சில மலையாள, தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், இப்போது நடிகர் துல்கர் சல்மான் தயாரிக்கும் ஒரு மலையாள படத்தில் உதவி இயக்குனர் எனும் புதிய அவதாரம் எடுத்து பணியாற்றி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஷம்ஸு இயக்கி வர, அவருடன் அனுபமா பரமேஸ்வரன் உதவி இயக்குனராக பணியாற்றும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பகுதியில் வெளியிட்டு இந்த தகவலை பகிர்ந்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன்!

#Anupama Parameswa #Anupama #Kodi #Premam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெஹந்தி சர்க்கஸ் கோடி அருவி பாடல்


;