நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற இருக்கிறது!

செய்திகள் 29-May-2019 11:02 AM IST Top 10 கருத்துக்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இப்போது பதவி வகித்து வரும் நிர்வாகிகளின் பதவிக்கால்ம் சமீபத்தில் முடிவடைந்தது. நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடிக்கப்படாத நிலையில் அதை காரணம் காட்டி தேர்தல் நடத்துவதை தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டார். அதன் படி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க ஜூன் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று நீதிபதி பத்மநாபன் தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் ஜூன் மாதம் 23-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சத்யா ஸ்டூடியோ வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலிலும் வழக்கம்போல ஒரு தலைவர், இரண்டு உப தலைவர், ஒரு பொதுச்செயலாளர், ஒரு பொருளாளர், 24 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்க்ள்!

கடந்த தேர்தலில் வெற்றிபெற்று நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து வரும் நாசர், செயலாளராக இருந்து வரும் விஷால், பொருளாளராக இருந்து வரும் கார்த்தி உட்பட்ட அதே கூட்டணி வரும் தேர்தலிலும் போட்டியிட இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டான டீஸர்


;