டாப்ஸி படத்தில் இணைந்த தனுஷ்!

டாப்ஸி நடிக்கும்  ‘கேம் ஓவர்’ படத்தின் டிரைலரை வருகிற 30-ஆம் தேதி தனுஷ் வெளியிடுகிறார்

செய்திகள் 28-May-2019 5:16 PM IST Top 10 கருத்துக்கள்

சூப்பர் ஹிட்டான ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேம் ஓவர்’. டாப்ஸி கதையின் நாயகியாக நடித்துள்ள இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ற மாதிரி இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் ‘கேம் ஓவர்’ படத்தின் தமிழ் டிரைலரை நாளை மறுநாள் (30-5-19) பகல் 1 மணிக்கு நடிகர் தனுஷ் வெளியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தெலுங்கு டிரைலரை நடிகர் ராணாவும் வெளியிடுகிறார்.

ஜூன் 14-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு சென்சாரில் U/A சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ளது. சஷிகாந்தின் ஒய்நாட் ஸ்டூடியோஸ் நிறுவனமும், ‘ரிலையன்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள ‘கேம் ஓவர்’ படத்திற்கு ‘மாயா’ படத்திற்கு இசை அமைத்த ரான் ஏதன் யோஹானே இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை வசந்த் கவனித்துள்ளார். படத்தொகுப்பை ரிச்சர்ட் கெவின் கவனித்து வருகிறார்.



#Dhanush #GameOver #AshwinSaravanan #taapseepannu #taapsee

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கிரி - ட்ரைலர்


;