தயாரிப்பாளரானார் துல்கர் சல்மான்!

‘குறுப்பு’ என்ற மலையாள படத்தின் மூலம் தயாரிப்பாளரானார் துல்கர் சல்மான்!

செய்திகள் 28-May-2019 11:38 AM IST VRC கருத்துக்கள்

‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துல்கர் சல்மான். இந்த படத்தை தொடர்ந்து மணிரத்னத்தின் ‘ஓக்கே கண்மணி’ படத்தில் நடித்த துலகர் சல்மான் தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் துல்கர் சல்மான் ஒரு படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அவர் தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் படம் ‘குறுப்பு’. மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்குகிறார். கேரளாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொலை குற்றத்தில் தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி சுகுமார குறுப்பு. இவரை போலீஸாரால் கைது செய்யவோ, கண்டுபிடிக்கவோ முடியவில்லை. கேரளாவை உலுக்கிய இந்த கொலை சம்பவத்தின் பின்னணியை வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் சுகுமார குறுப்பு கேர்க்டரில் துல்கர் சல்மான் நடிக்கிறார். அதனால் இப்படத்திற்கு ‘குறுப்பு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்த்ன் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இந்த படத்தில் துல்கர் சல்மான் பல்வேறு கெட்-அப்களில் தோன்றுகிறார் என்றும், இந்த படம் பெரிய படஜெட்டில் உருவாகிறது என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் உருவாகி வரும் படங்கl ‘வான்’, மற்றும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இந்த படங்கள் விரைவில் வெளியாகும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ட்ரைலர்


;