எலி, சிம்பன்சி, ஒட்டகம் வரிசையில் ‘பன்னிக்குட்டி’

யோகி பாபு, கருணாகரன் நடிக்கும் ‘பன்னிக்குட்டி’யின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்தது!

செய்திகள் 28-May-2019 11:18 AM IST VRC கருத்துக்கள்

‘கிருமி’ படத்தை இயக்கிய அனுசரண் முருகையா இயக்கத்தில் கருணாகரன், யோகி பாபு, சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, டி.பி.கஜேந்திரன், லட்சுமி ப்ரியா, ராமர், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ‘பன்னிக்குட்டி’. ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இப்போது படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்தது என்ற தகவலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை துவங்கியுள்ள படக்குழுவினர் இப்படத்தை மிக விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ‘ஆண்டவன் கட்டளை’, ‘கிருமி’ போன்ற படங்களுக்கு இசை அமைத்த கே என்கிற கிருஷ்ணகுமார் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்கிறார். யோகி பாபு, கருணாகரன், சிங்கம் புலி என்று ஏராளமான காமெடி நடிகர்கள் நடிப்பில் உருவாகி வரும் ‘பன்னிக்குட்டி’ முழுக்க முழுக்க ஒரு காமெடி படமாக உருவாகி வருகிறதாம். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மான்ஸ்டர் படத்தில் ஒரு எலி முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றிருந்தது. அதைப் போல ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘கொரில்லா’வில் சிம்பன்ஸி, விக்ராந்த் நடிக்கும் ‘பக்ரீத்’ படத்தில் ஒட்டகம் ஆகிய விலங்குகள் முக்கிய கதாபாத்திரமாக இடம் பெறுகிறது. இப்படி சமீபகாலமாக விலங்குகள் இடம்பெற்று வெளியாக இருக்கும் படங்கள் வரிசையில் ‘பன்னிக்குட்டி’யும் விரைவில் இடம்பெற இருக்கிறது. இந்த படங்கள் தவிர ஜீவா நடிக்கும் ஜிப்ஸி படத்தில் ஜீவா கேரக்டருடன் படம் முழுக்க ஒரு குதிரையும் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பெட்ரோமாக்ஸ் ட்ரைலர்


;