‘கசட தபற’வில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்?

‘கசட தபற’வில் வெங்கட் பிரபு, சந்தீப், அரவிந்த் ஆகாஷ், ஹரீஷ், ப்ருத்திவி, விஜயலட்சுமி, ப்ரியா பவானி சங்கர், பிரேம்ஜி, ரெஜினா, சாந்தனு, சம்பத்

செய்திகள் 27-May-2019 3:46 PM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபுவின் ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’யும், ரவீந்திரனின் ‘டிரைடன்ட் ஆர்டஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கசட தபற’. இந்த படத்தை சிம்பு தேவன் இயக்குகிறார். இந்த படத்தில் 6 படத்தொகுப்பாளர்கள் 6 இசை அமைப்பாளர்கள், 6 ஒளிப்பதிவாளர்கள் பணிபுரிய இருக்கிறார்கள். இது குறித்த விவரங்களை சமீபத்தில் பதிவிட்டிருந்தோம். இப்போது இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் வெங்கட் பிரபு, சந்தீப், அரவிந்த் ஆகாஷ், ஹரீஷ், ப்ருத்திவி, விஜயலட்சுமி, ப்ரியா பவானி சங்கர், பிரேம்ஜி, ரெஜினா, சாந்தனு, சம்பத் ஆகியோர் நடிக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் 6 இசை அமைப்பா ளர்கள், 6 ஒளிப்பதிவாளர்கள், 6 படத்தொகுப்பாளர்கள் பணியாற்ற இருப்பது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில் இப்போது இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது.

#KasadaTabara #ChimbuDevan # VenkatPrabhu # Premgi #HarishKalyan #Shanthanu #SundeepKIshan
#AravindAkash #Prithvi #Sampath #ReginaCassandra #Vijayalakshmi #PriyaBhavaniShankar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தனுசு ராசி நேயர்களே - டீஸர்


;