சூர்யாவின் ‘NGK’யை கைபற்றிய 2 பிரபல நிறுவனங்கள்!

சூர்யாவின் ‘NGK’ படத்தின் சாட்லைட் உரிமையை விஜய் டிவி கைபற்ற, டிஜிட்டல் உரிமையை அமெசான் பிரைம் வீடியோ கைபற்றியுள்ளது!

செய்திகள் 27-May-2019 3:21 PM IST VRC கருத்துக்கள்

செல்வராகவனும், சூர்யாவும் முதன் முதலாக கூட்டணி அமைத்து உருவாக்கியுள்ள ‘NGK’ வருகிற 31-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. சூர்யா இதுவரை நடித்த படங்கள் மீது ஏற்பட்ட எதிர்பார்ப்பை விட ‘NGK’ மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் மே 31-ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படம் அமெரிக்கா நீயூசிலாந்த், ஃபிரான்ஸ், தென்கொரியா என்று பெரும்பாலான வெளிநாடுகளிலும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் NGK’ படத்தின் சாட்லைட் உரிமையை பிரபல விஜய் டிவி நிறுவனம் கைபற்றியுள்ளது. அதைப்போல டிஜிட்டல் உரிமையை பிரபல அமெசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைபற்றியுள்ளது. இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சூர்யாவின் ‘NGK’ மீது மேலும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள NGK (நந்த கோபாலன் குமரன்) படத்தில் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பிரவீன் கே.எல்.படத்தொகுப்பு செய்துள்ளார் சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.#NGK#Suriya #YuvanShankarRaja #Saipallavi #RakulPreet #Selvaraghavan #SRPrabhu #DreamWarriorPictures

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பியார் பிரேமா காதல் - ஹை ஆன் லவ் சிங்கள் ட்ராக்


;