‘கசட தபற’ வெங்கட் பிரபுவின் அடுத்தடுத்த முக்கிய அறிவிப்புகள்!

‘கசட தபற’ படத்தின் 6 இசை அமைப்பாளர்கள், 6 எடிட்டர்கள், 6 ஒளிப்பதிவாளர்கள் குறித்த அறிவிப்பு!

செய்திகள் 25-May-2019 12:14 PM IST Top 10 கருத்துக்கள்

சிம்பு தேவன் அடுத்து இயக்கும் படம் ‘கசட தபற’ என்றும் இந்த படத்தை வெங்கட் பிரபுவின் ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’யும், ரவீந்திரனின் ‘டிரைடன்ட் ஆர்டஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது என்றும் இந்த படத்தில் 6 படத்தொகுப்பாளர்கள் 6 இசை அமைப்பாளர்கள், 6 ஒளிப்பதிவாளர்கள், 6 ஹீரோக்கள், 6 ஹீரோயின்கள் பணிபுரிய இருக்கிறார்கள் என்ற தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இந்த படத்தில் ஆண்டனி, காசி விஸ்வநாதன், ராஜா முகமது, பிரவீன் கே.எல்., விவேக் ஹர்ஷன், ரூபன் ஆகிய 6 படத்தொகுப்பாளர்கள் பணிபுரிய இருப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெங்கட் பிரபு சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து இந்த படத்தில் எம்.எஸ்.பிரபு, பாலசுப்பிரமணியிம், விஜய் மில்டன், சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர், ஆர்.டிராஜசேகர் ஆகிய 6 ஒளிப்பதிவாளர்கள் பணியாற்ற இருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடந்து இப்போது இந்த படத்திற்கு இசை அமைக்க இருக்கும் 6 இசை அமைப்பாளர் குறித்த அறிவிப்பை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். அதில் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், ஷான் ரோல்டன், சாம்.சி.எஸ்., பிரேம்ஜி அமரன் ஆகியோர் ‘கசட தபற’ படத்தின் இசை அமைப்பாளர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்து ஹீரோக்கள், ஹீரோயின்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்று இந்த படத்தில் 6 இசை அமைப்பா ளர்கள், 6 ஒளிப்பதிவாளர்கள், 6 படத்தொகுப்பாளர்கள் பணியாற்ற இருப்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருவதால் இப்படத்தின் மீது ஏதிர்பார்ப்பு உருவாகியுள்ளது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராட்சசி - ட்ரைலர்


;