கார்த்தியின் பிறந்த நாள் பரிசு!

‘கைதி’ படத்தின் செகண்ட் லுக் மற்றும் டீஸர் ரிலீஸ் தேதி – ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளித்த கார்த்தி!

செய்திகள் 25-May-2019 11:14 AM IST VRC கருத்துக்கள்

‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘கைதி’. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் ‘விவேகானந்தா பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் வித்தியாசமான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மார்ச் மாதம் 8-ஆம் தேதி வெளியானது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் இடம் பெற்றிருந்த கார்த்தியின் தோற்றம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வைரலானது. இதனை தொடர்ந்து ‘கைதி’யின் செகண்ட் லுக்கை படக்குழுவினர் நேற்று மாலை வெளியிட்டனர். இந்த செகண்ட் லுக்கிலும் கார்த்தி மிரட்டலான தோற்றத்தில் இடம்பெற, இந்த செகண்ட் லுக்கும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்று (மே-25) கார்த்தியின் பிறந்த நாள் என்பதால் அதனை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த செகண்ட் லுக்கையும் ரசிகர்கள் தங்களுக்கு கார்த்தி வழங்கிய பிறந்த நாள் பரிசாக நினைத்து கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் கார்த்தியின் ரசிகர்களுக்கு மற்றுமொரு பிறந்த நாள் ட்ரீட்டாக ‘கைதி’யின் டீஸர் வருகிற 30-ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இதனால் கார்த்தியின் ரசிகர்கள் டபுள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். ஒவ்வொரு வருடமும் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பல்வேறு நற்பணிகளை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது! அந்த வகையில் இந்த வருடமும் கார்த்தியின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார்கள்.

விரைவில் ரிலீசாக இருக்கும் ‘கைதி’ படத்தின் ஒளிப்பதிவை சத்யன் சூரியன் கவனித்துள்ளார். சாம்.சி.எஸ்.இசை அமைக்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்து வருகிறார். சண்டை காட்சிகளை அன்பறிவு அமைத்திருக்க, கலை இயக்கத்தை என்.சதீஷ் குமார் கவனித்துள்ளார். ‘கைதி’ படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் இரண்டு படங்கள் உருவாகி வருகிறது. அதில் ஒரு படத்தை ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். இன்னொரு படத்தை ‘திருசியம்’ படப் புக்ழ ஜித்து ஜோசஃப் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கைதி படத்தை தொடர்ந்து இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கைதி டீஸர்


;