விஜய்சேதுபதியின் ‘விஜய்சேதுபதி புரொடக்ஷன்ச், ‘ஆரஞ்சு மிட்டாய்’ புரொடக்ஷன்ஸு’டன் இணைந்து தயாரிக்கும் படம் ‘சென்னை பழனி மார்ஸ்’. இந்த படத்தை விஜய்சேதுபதியை வைத்து ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை இயக்கிய பிஜு இயக்குகிறார். டிராவல் ஸ்டோரியாக உருவாகும் இந்த படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதை நோக்கிய கனவும் இருக்கும். ஆனால் அந்தக் கனவுகளை உண்மையாக்கும் முயற்சியில் சிலர் பாதியில் தோற்றிருக்கலாம், அல்லது போராடிப் பார்த்து விட்டிருக்கலாம். சிலர் வெற்றியும் பெற்றிருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு அற்புத கனவை ப்ளாக் காமெடி ஜானரில் சொல்லும் படமாம் ‘சென்னை பழனி மார்ஸ்’. இந்த படத்தை இயக்குவதோடு இப்படத்தின் திரைக்கதை அமைப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய பொறுப்புக்களையும் பிஜுவே ஏற்று செய்துள்ளார். இப்படத்திற்கான வசனங்களை விஜய்சேதுபதி எழுதியுள்ளார்.
இந்த படத்தில் பிரவீணா ராஜா, ராஜேஷ் கிரிபிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் மதன்குமார் தட்சிணா மூர்த்தி, எ.ரவிக்குமார், ஆல்வின் ராமையா, ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். நிரஞ்சன் பாபு இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை விக்னேஷ் ஜெயபால் எழுதியுள்ளார். அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தை மிக விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
# VijaySethupathi #OrangeMittaiProductions #BijuViswanath #Chennai Palani Mars
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...
விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘96’. பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இப்படம்...