நட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்

அறிமுக இயக்குனர் சிவா அரவிந்த் இயக்கத்தில் கவின், ரம்யா நம்பீசன், அருண்ராஜா காமராஜ், ராஜு ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’. பல தடைகளை தாண்டி வெளியாகியுள்ள இந்த படம் என்

விமர்சனம் 18-May-2019 1:31 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Shiva Aravind
Production : Libra Productions
Cast : Kavin, Remya Nambeesan, Arunraja Kamaraj
Music : Dharan
Cinematography: Yuva
Editor : Nirmal

கதைக்களம்

கவின், அருண்ராஜா காமராஜ், ராஜு ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தால் இனி பெண்களே நம்முடைய வாழ்க்கையில் இல்லை என்று முடிவு செய்கிறார்கள். வெட்டியாக ஊரை சுற்றித்திரிந்து கொண்டிருந்த இவர்கள் சுய தொழில் ஆரம்பித்து வருமானம் ஈட்டத்துவங்கிய நிலையில் ராஜுக்கு ரம்யா நம்பீசன் மீது காதல் வருகிறது. ஒரு கட்டத்தில் ராஜு தனது நண்பர்களுக்கு ரம்யா நம்பீசனை அறிமுகப்படுத்தி வைக்க முயற்சி செய்யும்போது, கவினுக்கு ரம்யா நம்பீசன் மீது காதல் ஏற்பட, ரம்யா நம்பீசனும் கவினின் காதலை ஏற்றுக்கொள்கிறார்! இதனை தொடர்ந்து நண்பர்களுக்கிடையில் விரிசல் ஏற்படுகிறது! அதன் பின்னர் நடக்கிற சம்பவங்களில் வென்றது நட்பா? இல்லை காதலா? என்பதே படத்தின் கதை!

படம் பற்றிய அலசல்

அறிமுக இயக்குனர் சிவா அரவிந்த், மூன்று நண்பர்களை வைத்து நட்பு, காதல் ஆகியவற்ற சமமான அளவில் காட்சிகளாக்கி படமாக்கியுள்ள விதம் கவனம் பெறுகிறது. காதலை விட நட்புதான் வலிமையானது, அதே நேரம் நிஜ காதலுக்கு சில சம்யங்களில் நட்பும் கை கொடுக்கும் என்ற விஷயத்தை சொல்ல வந்திருக்கும் இந்த படம், அதற்கு எடுத்துக்கொண்ட நேரம்தான் மிக மிக அதிகம். படத்தின் முதல் பாதியில் ஒரு சில காமெடி காட்சிகள் தவிர சொல்லும்படியாக எந்த சுவாரஸ்ய விஷயங்களும் இல்லை. அதனால் போரடிக்கவே செய்கிறது. அதன் பிறகு நண்பர்களுக்கு இடையில் விரிசல் ஏற்படுவதிலிருந்து பயணிக்கும் இரண்டாம் பாதி திரைக்கதை கொஞ்சம் சூடு பிடித்து சுவாரஸ்யப்படுத்துகிறது. கவினுக்கும் ரம்யா நம்பீசனுக்கு இடையில் காதல் ஏற்படுவதற்கான காரணம், அதன் பின்னணி, அரசாங்க மருத்துவமனையில் டாக்டர் இல்லாத நேரத்தில் ஆயா மருத்துவம் பாரப்பது போன்ற விஷயங்களை சுவாரஸ்யமாக காட்சிகளாக்கிய இயக்குனர் சிவா அரவிந்த் நண்பர்களுக்கு இடையிலான ‘நட்பு’ விஷயங்களையும் நன்றாக கையாண்டுள்ளார். படத்தின் கதையோட்டத்திற்கு தரணின் இசை, யுவராஜின் ஒளிப்பதிவு ஆகிய விஷயங்கள் கை கொடுத்துள்ளன. படத்தொகுப்பாளர் நிர்மல் படத்தின் முதல்பாதியில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் ம் இரண்டாம் பாதியை போல முதல்பாதியும் விறுவிறுப்படைந்திருக்கும்!

நடிகர்களின் பங்களிப்பு

கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் ஆகிய மூன்று பேரும் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியுள்ளனர் என்றாலும், ரோஷம், எமோஷன் முதலான விஷயங்களில் ராஜுதான் நடிப்பில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். கதையின் நாயகியா வரும் ரம்யா நம்பீசன் வழக்கம்போல தனது இயல்பான நடிப்பை வழங்கி அந்த கதாபாத்திரத்தை சிறப்பித்துள்ளார். ரம்யா நம்பீசனின் அப்பாவாக, முதலில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவராகவும், கடைசியில் ஆதரவு தெரிவிப்பவராகவும் நடித்துள்ள அழகம் பெருமாளின் பங்களிப்பும் குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது. இவர்கள் தவிர படத்தில் இளவரசு, மோட்டை ராஜேந்திரன், சுஜாதா, மன்சூரலிகான், ரமா ஆகியோரும் நடித்துள்ளனர்.

பலம்

1.நட்பையும் காதலையும் மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள கதை

2.காமெடி

பலவீனம்

1. முதல்பாதி

2. படத்தொகுப்பு

மொத்தத்தில்…

காதல், நட்பு ஆகிய விஷயங்களில் விட்டுக்கொடுத்தால் வாழ்க்கை பயணம் மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்பதை ஓரளவுக்கு சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இந்த படம் இளைஞர்களை கவர வாய்ப்பிருக்கிறது.

ஒருவரி பஞ்ச் : நண்பன் காதலியை உஷார் பண்ணும் கதை!

ரேட்டிங் : 4/10

#Kavin #RemyaNambeesan #ArunrajaKamaraj #NatpunaEnnanuTheriyumaReview
#NatpunaEnnanuTheriyuma

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்


;