‘தும்பா’வின் புதிய ரிலீஸ் தேதி!

இன்று (மே-17) ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ‘தும்பா’ ஜூன் 21-ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு!

செய்திகள் 18-May-2019 12:50 PM IST Top 10 கருத்துக்கள்

‘கனா’ படத்தை தொடந்து தர்ஷன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘தும்பா’. இந்த படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார். இயக்குனர் துரை செந்தில் குமாரின் உதவியாளர் ஹரீஷ் ராம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசை அமைக்கிறார்கள். முழுக்க முழுக்க ஃபேண்டசி ரக படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் சமீபத்தில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து இப்படம் மே-17 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். ஆனால் அறிவித்தபடி ‘தும்பா’ இன்று வெளியாகவில்லை! இந்நிலையில் ‘தும்பா’வுக்கு புதிய ரிலீஸ் தேதி குறித்த படக்குழுவினர் தும்பா ஜூன் 21-ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகார்பூர்வ அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ளனர். சென்சாரில் ‘U’ சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ள தும்பாவின் விநியோக உரிமையை ‘கோட்டபடி’ ராஜேஷின் ‘KJR Studio’s நிறுவனம் கைபற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#Thumbaa #AnirudhRavichander #SanthoshDhayanidhi #VivekMervin #Darshan #Dheena #KeerthiPandian

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

லிசா 3D - ட்ரைலர்


;