ரஜினியின் ‘தர்பார்’ அப்டேட்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு மே 29-ஆம் தேதி துவங்குகிறது!

செய்திகள் 17-May-2019 10:34 AM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘தர்பார்’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் துவங்கி தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்தது என்றும் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 29-ஆம் தேதி துவங்க இருக்கிறது என்றும் தகவலை இந்த படத்தை தயாரிக்கும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த படத்தின் ரஜினியுடன் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க மற்றும் இப்படத்தில் ‘யோகி’ பாபு, பாலிவுட் நடிகர் தலீப் தாஹில், நிவேதா தாமஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஒளிப்பதிவை சந்தோஷ் சிவன் கவனிக்க, அனிருத் இசை அமைக்கிறார். படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கவனிக்கிறா. ‘தர்பார்’ அடுத்த (2020) ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

#Superstar #ARMurugadoss #Rajinikanth #Nayanthara #BabuVijay

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மிஸ்டர். லோக்கல் - ட்ரைலர்


;