ரஜினியின் ‘தர்பாரி’ல் இணைந்த ‘அஞ்சான்’ பட பிரபலம்!

ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் தலீப் தாஹில்!

செய்திகள் 14-May-2019 11:44 AM IST Top 10 கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘தர்பார்’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ‘யோகி’ பாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் தலீப் தாஹிலும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தலீப் தாஹில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தர்பார் படத்தில் நடிக்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இவர் ஏற்கெனவே ரஜினிகாந்துடன் ‘ஆதங்க் ஹி ஆதங்க்’ என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 1995-ல் வெளியாகி இருந்தது. இப்போது 24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‘தர்பார்’ படத்தின் மூலம் ரஜினியும், தலீப் தாஹிலும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தலீப் தாஹில், லிங்கு சாமி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுடனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

#Darbar #DalipTahil #Rajini #Superstar #Rajinikanth #ARMurugadoss

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேட்ட ட்ரைலர்


;