100 - விமர்சனம்

மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் காவலன்!

விமர்சனம் 11-May-2019 4:20 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Sam Anton
Production : Auraa Cinemas
Cast : Atharvaa, Hansika
Music : Sam CS
Cinematography: Krishnan Vasant
Editor : Praveen KL

ஜி.வி.பிரகாஷை வைத்து காமெடி ஜானரில் ‘டார்லிங்’ மற்றும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன், தனது மூன்றாவது படமாக அதர்வாவை போலீஸ் கேரக்டரில் நடிக்க வைத்து இயக்கியுள்ள ‘100’ எப்படி?
கதைக்களம்

நேர்மையும் வீரமும் கொண்ட ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் அதர்வாவுக்கு தான் ஆசைப்பட்டது மாதிரியே போலீஸ் வேலை கிடைக்கிறது. ஆனால் அதர்வாவின் விருப்பத்துக்கு மாறாக அவர் ‘100’ என்று அழைக்கப்படும் போலீஸ் கட்டுப்பாடு அறையில் வேலையில் அமர்த்தப்படுகிறார். போலீஸ் கட்டுப்பாடு அறையில் இருந்தவாறு அதர்வா எப்படி பெண்களை கடத்தும், போதை மருந்தை கட்டத்தும் கிரிமினல்களை வேரறுத்து தன் லட்சியத்தை அடைகிறார் என்பது தான் ‘100’ன் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

இதற்கு முன் ஹாரர், காமெடி ஜானர் படங்களை இயக்கிய சாம் ஆண்டன், இந்த படத்தின் மூலம் சீரியஸான ஒரு போலீஸ் கதையை தர முயறிசித்துள்ளர். ‘போலீஸ் கண்டரோல் ரூமில் வேலை செய்யும் ஒரு போலீஸ் அதிகாரி என்ற விஷயத்தை மட்டும் வித்தியாசமாக யோசித்த சாம் அதற்கேற்ற மாதிரி திரைக்கதையில் புதிய விஷயங்களை அமைக்கவில்லை. வழக்கமாக போதை மருது கடத்துவது, பெண்களை கடத்துவது போன்ற சமூக விரோதயல்களில் ஈடுபடுபவர்களை வேட்டையாடும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதையாகவே ‘100’ அமைந்துள்ளது.

போலீஸ் கண்ட்ரோல் ரூமில் பணிபுரியும் ஒரு போலீஸ் அதிகாரி தான் நினைக்கும்போதெல்லாம் வெளியில் சென்று, பாதிப்படுபவர்களுக்கு உதவி செய்வது மாதிரி வரும் காட்சிகளில் நம்பகத்தன்மையும், லாஜிக்கும் இல்லை. ஆனால் இடைவேளைக்கு பிறகு கிரிமினல் விஷயங்களுக்கு பின்னணியில் இருப்பவர் யார் என்பது தெரிய வருவது, அவன் இப்படி கிரிமினல் விஷயங்களை செய்ய என்ன காரணம் என்பது போன்ற விஷயங்களை சுவாரஸ்யமாக படமாக்கியிருப்பதால் படத்தின் இரண்டாம்பாதி விறுவிறுப்பாக பயணித்து ரசிக்க வைக்கிறது. அதே நேரம் யோகி பாபு சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. சாம்.சி.எஸ்.ஸின் பின்னணி இசை, கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு, ரூபனின் படத்தொகுப்பு ஆகிய விஷயங்களும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. கதாநாயகியாக வரும் ஹன்சிகா கேரக்டர் உட்பட கதைக்கு சம்பந்தமில்லாமல் வரும் ஏகபட்ட கேரக்டர்கள், லாஜிக் விஷயங்கள் முதலானவற்றில் மேலும் கவனம் செலுத்தியிருந்தால் ‘100’ கவனம்பெறும் படமாக அமைந்திருக்கும்.

நடிகர்களின் பங்களிப்பு

போலீஸ் அதிகாரி கேரட்கருக்கு அதர்வா கரெக்டாக பொருந்தி, சிறப்பான நடிப்பையும் வழங்கியுள்ளார். கதாநாயகியாக வரும் ஹன்சிகா ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து போவதால் அவரை பற்றி குறிப்பிட ஒன்றும் இல்லை! வில்லனாக வரும் ‘மைம்’ கோபி, அவரது உதவியாளராக வரும் (மறைந்த) சீனு மோகன், உயர் போலீஸ் அதிகாரிகளாக வரும் ஆடுகளம் நரேன், ராதாரவி மற்றும் அதர்வா கூட வேலை செய்யும் போலீஸ்காரராக வரும் யோகி பாபு ஆகியோர் தங்களது கேரக்டர்களின் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

பலம்

1. போலீஸ் கண்ட்ரோல் ரூம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்

2. அதர்வா, யோகி பாபு

3. பின்னணி இசை, ஒளிப்பதிவு

பலவீனம்

1. வலுவில்லாத திரைக்கதை

2. லாஜிக் விஷயங்கள்

3. கதைக்கு தேவையில்லாமல் வரும் சில கேரக்டர்கள்

மொத்தத்தில்…

போலீஸ் கட்டுப்பாடு அறை, மக்களிடத்தில் இருந்து வரும் புகார்கள், அந்த புகார்களை போலீஸ் அதிகாரிகள் கையாளும் விதம் போன்ற விஷயங்க்ளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருப்பதால் வரவேற்கலாம்!

ஒருவரி பஞ்ச் : மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் காவலன்!

ரேட்டிங் : 4/10


#100Movie #100themovie #Atharvaa #Hansika #SamAnton #SamCS #PraveenKL #AuraaCinemas

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 ட்ரைலர்


;