சசிகுமார் நடிக்கும் படத்தின் புதிய தகவல்!

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார், மடோனா செபாஸ்டியன் நடிக்கும்  ‘கொம்புவச்ச சிங்கமடா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

செய்திகள் 10-May-2019 4:15 PM IST Top 10 கருத்துக்கள்

‘குற்றம்-23’, ‘தடம்’ ஆகிய படங்களை தயாரித்த ‘ரெதான்’ நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் படம் ‘கொம்புவச்ச சிங்கமடா’. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார், மடோனா செபாஸ்டியன் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் சூரி, ஹரீஷ் பேரடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, தீபா ராமானுஜம், சென்றாயன், இப்படத்தின் தயாரிப்பாளர் இந்தர் குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். கடந்த நவம்பவர் 12-ஆம் தேதி காரைக்குடியில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக இடைவிடாமல் பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர், குற்றாலம் ஆகிய இடங்களில் நடந்து கடைசியில் பொள்ளாச்சிய்ல் நிறைவு பெற்றது. 1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படியாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு திபு நைனன் தாமஸ் இசை அமைக்கிறார். டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்கிறார். இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீசாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

#kombuvatchasingamda #Sasikumar #SRPrabhakaran #Soori

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;