‘கனா’, ‘நட்பே துணை’ வரிசையில் ஆதி நடிக்கும் படம்!

அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கத்தில் ஆதி நடிக்கும் ஸ்போர்ட்ஸ் படம்!

செய்திகள் 7-May-2019 2:17 PM IST Top 10 கருத்துக்கள்

‘ஈட்டி’, சமீபத்தில் வெளியான ‘கனா’, ‘நட்பே துணை’ என்று தமிழ் சினிமாவில் சமீபகாலமாக விளையாட்டு அடிப்படையிலான திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் அறிமுக இயக்குனர் பிரித்வி அதித்யா இயக்கத்தில் ஒரு படம் உருவாகிறது. தடகள விளையாட்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த கதையில் ஆதி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிக்கான தேர்வு நடந்து வரும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பிரவீன் குமார், படத்தொகுப்பாளராக ராகுல், கலை இயக்குனராக வைரபாலன் ஆகியோர் பணிபுரிய இருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ‘பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் காத்திக்யேன் தயாரிக்க இவருடன் ‘பி.எம்.எம்.ஃபிலிம்ஸ்’ மற்றும் ‘கட்ஸ் & குளோரி ஸ்டூடியோஸ்’ ஜி.மனோஜ், ஸ்ரீஹர்ஷா ஆகியோரும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

#Aadhi #PrithiviAdithya #Kanaa #NatpeThunai #Eetti

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ட்ரைலர்


;