‘SK-16’ இசை அமைப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார்!

செய்திகள் 6-May-2019 4:45 PM IST Top 10 கருத்துக்கள்

எம்.ராஜேஷ்ம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ இம்மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘இரும்புத்திரை’ இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’, ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சயன்ஸ் ஃபிக்‌ஷன் படம் என்று நடித்து வரும் சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ‘SK-16’ என்று தற்காலிகமாக் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்க இந்த படத்தின் இசை அமைப்பாளர் குறித்த அதிகாரபூர்வ தகவலை சற்றுமுன் வெளியிட்டுள்ளனர். ஏற்கெனவெ இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றிய டி.இமான் தான் ‘SK-16’ படத்திற்கும் இசை அமைப்பாளர்.

#Sivakarthikeyan #SK #SK16 #Pandiraj #DImman #Hero #MrLocal #SunPictures

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மிஸ்டர். லோக்கல் - ட்ரைலர்


;