‘நீயா-2’ ரிலீஸ் தள்ளி வைப்பு!

இம்மாதம் 10 ஆம் தேதி வெளியாக இருந்த ‘நீயா-2’ மே 24-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது!

செய்திகள் 6-May-2019 4:21 PM IST VRC கருத்துக்கள்

‘எத்தன்’ படத்தை இயக்கிய சுரேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நீயா-2’. இந்த படத்தில் ஜெய், ராய் லட்சுமி, வரலட்சுமி சரத்குமார் கேத்ரின் தெரெசா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் இம்மாதம் 10-ஆம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விநியோகஸ்தர்களின் வேண்டுகோளின் படி ‘நீயா-2’வின் ரிலீஸை இம்மாதம் 24-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதை படக்குழுவினர் தெரிவித்துள்ளர். இந்த மாதம் 9-ஆம் தேதி அதர்வாவின் ‘100’ படம் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து மே 10-ஆம் தேதி விஷாலின் ‘அயோக்யா’, ஜீவானின் ‘கீ’ ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் இப்போது ‘நீயா-2’ படத்தின் ரிலீஸ் இரண்டு வாரக் காலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#Jai #Neeya2 #VaralaxmiSarathKumar #RaaiLaxmi #CatherineTresa

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயா 2 - ட்ரைலர்


;