‘நெடுநல்வாடை’ படத்திற்கு விருது!

அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் வெளியான  ‘நெடுநல்வாடை’ படத்திற்கு விருது!

செய்திகள் 6-May-2019 3:01 PM IST Top 10 கருத்துக்கள்

‘பூ’ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த மார்ச் 15-ஆம் தேதி வெளியான படம் ‘நெடுநல்வாடை’. இந்த படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படம் சமீபத்தில் பெங்களூரில் Innovatie Film Acadamy ( IFA) சார்பில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதை வென்றுள்ளது. இவ்விழாவில் 26 நாடுகளிலிருந்து 106 திரைப்படங்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

விருது கிடைத்த மகிழ்ச்சியில் இயக்குனர் செல்வக்கண்ணன் விழாவில் பேசியதாவது…

‘‘ரொம்ப பெருமையா இருக்கு. இவ்வளவு பெரிய, பல நாடுகளில் இருந்து, பல மொழிகளில் இருந்து வந்திருக்கும் முக்கியமான இயக்குனர்கள், சினிமாத்துறையில் இருந்து வந்திருப்போர்கள் முன்னாடி எங்கள மாதிரி புதியவர்கள் நிக்கிறோம்கிறது எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு. எங்களை அங்கீகரித்த Innovatie Film Acadamy ( IFA) க்கு ரொம்ப நன்றி. எங்கள் படத்தை பரிந்துரைத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நன்றி. தமிழ் சினிமா துறையில் உருவான முதல் CROWD FUNDING திரைப்படம் இது. இந்த படத்தில் என்னுடன் பணிபுரிந்த அத்தனை பேருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று பேசியுள்ளார்.


#Nedunalvaadai #Selvakannan #MimeGopi #ElvisAlexander #AindhuKovilan #AjayNatraj #AnjaliNair

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;