‘இராவண கோட்ட'த்தில் சாந்தனுவுக்கு ஜோடி யார் தெரியுமா?

விக்ரம் சுகுமாரன் இயக்கும் ‘இராவண கோட்டம்’ படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியான கயல் ஆனந்தி!

செய்திகள் 6-May-2019 12:26 PM IST Top 10 கருத்துக்கள்

‘மதயானை கூட்டம்’ படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கும் படம் ‘இராவண கோட்டம்’ என்றும் இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ் கதையின் நாயகனாக நடிக்கிறார் என்றும் தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்கள் கிடைத்து வெற்றிப் படமாக அமைந்த ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் கதாநாயகி ‘கயல்’ ஆனந்தி ‘இராவண கோட்டம்’ படத்தின் கதாநாயகியாகி உள்ளார். இது குறித்த அறிவிப்பை சாந்தனு தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதில், ‘‘மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ‘கயல்’ ஆனந்தி ‘இராவண கோட்டம்’ படத்தில் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அழகிய பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது’’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து நவீன் இயக்கத்தில் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்திலும் நடித்துள்ளார் ஆனந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

‘கண்ணன் ரவி குரூப்’ நிறுவனம் சார்பில் தொழிலபதிபரான கண்ணன் ரவி தயாரிக்கும் முதல் படம் இது. ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கும் இந்த படத்தில் சாந்தனு, ஆனந்தி ஆகியோருடன் நடிக்கும் மற்ற நடிகர்கள் நடிகைகள் குறித்த விவரங்கள் விரவிவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#ShanthanuBhagyaraj #Shanthanu #KayalAnandhi #RavanaKottam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முப்பரிமாணம் சொக்கி போறாண்டி வீடியோ பாடல்


;