மாற்றுத்திறனாளிகளுக்காக படம் இயக்கும் லாரன்ஸ்!

முழுக்க முழுக்க மாற்றுத்திறனாளிகளுக்காகவே ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ள ராகவா லாரன்ஸ்!

செய்திகள் 4-May-2019 11:48 AM IST Top 10 கருத்துக்கள்

திரையுலகில் வரும் வருமானத்தை வைத்து மாற்றுத்திறனாளிகளுக்காக இல்லம் ஒன்றை லாரன்ஸ் நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. அது மட்டுமில்லாமல், தான் இயக்கும் படங்களிலும் மாற்றுத்திறனாளிகளையும், திருநங்கைகளையும் பாசிட்டிவாக காட்டுவது லாரன்ஸின் வழக்கம். சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘காஞ்சனா 3’ படத்தில்கூட மேற்படி காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ராகவா லாரன்ஸ்.

இந்நிலையில், முழுக்க முழுக்க மாற்றுத்திறனாளிகளை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் லாரன்ஸ். தங்களுக்கிருக்கும் குறைகளிலிருந்து மீண்டு எப்படி மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள் என்பது போன்று தான் உருவாக்கியுள்ள கதையை, தன் இல்லத்திலிருக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்களிடம் சொல்லி இருக்கும் லாரன்ஸ், விரைவில் அப்படத்தை இயக்கும் பணிகளிலும் ஈடுபடவிருக்கிறாராம். இந்த அறிவிப்பை சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் லாரன்ஸே தெரிவித்துள்ளார்.


#Lawrence #RaghavaLawrence #Kanchana3 #Kanchana #LaxxmiBomb

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு சட்டை ஒரு பல்பம்


;