த்ரிஷா பிறந்த நாள் ஸ்பெஷல்!

த்ரிஷா பிறந்த நாளை முன்னிட்டு அவரது 60-வது படமான ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் டிரைலர் வெளியாகிறது!

செய்திகள் 3-May-2019 11:12 AM IST Top 10 கருத்துக்கள்

கே.திருஞானம் இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் படம் ‘பரபதம் விளையாட்டு’. ‘24 HRS புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிக்கும் இந்த படம் த்ரிஷாவின் 60-அவது படமாகும். இந்த படத்தின் டிரைலர் த்ரிஷாவின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை (மே-4) வெளியாக இருக்கிறது. இது குறித்து த்ரிஷா வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது,

‘‘மே 4-ஆம் தேதி என்றாலே எனக்கு ஸ்பெஷல்தான்! என்னுடைய பிறந்தநாள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்த வருடம் ரொம்ப ஸ்பெஷலானதுன்னு சொல்லலாம். என்னுடைய 60-வது படமான ‘பரமபதம் விளையாட்டு’ படத்தோட டிரைலர் மற்றும் இரண்டாவது லுக்கை நாளை வெளியிட இருக்கிறார்கள். ‘பரமபதம் விளையாட்டு’ இது ஒரு பொலிடிக்கல் த்ரில்லர் படம். இந்த ரகத்தில் என்னோட முதல் படம். ஒரு இரவில் காட்டுக்குள் நடக்கிற விஷயங்கள்தான் முழுப் படமும். கண்டிப்பா இந்த படம் எல்லா தரப்பு ரசிகர்களுக்குமான படமாக இருக்கும். ‘பரமபதம் விளையாட்டு’ எல்லாம் கலந்த திரில்லர், ரிவெஞ்ச் ஆக்‌ஷன் படம்! அம்மா பொண்ணுக்கு இடையே உள்ள எமோஷன்ஸ், செண்டிமெண்ட்கள் இருக்கும். இந்த படத்தை பாருங்க, சப்போர்ட் பண்ணுங்க’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தில் த்ரிஷாவுடன் ரிச்சர்ட், நந்தா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். அம்ரீஷ் இசை அமைக்கிறார். J.தினேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.

#Trisha #TrishaBirthdaySpecial #ParamapathamVilaiyattu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பரமபதம் விளையாட்டு - ட்ரைலர்


;