அதர்வாவின் ‘100’ ரிலீஸ் தள்ளி வைப்பு!

மே 3-ஆம் தேதி ரிலீசாக  இருந்த அதர்வாவின் ‘100’  மே 9-ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு!

செய்திகள் 30-Apr-2019 1:52 PM IST Top 10 கருத்துக்கள்

சாம் ஆண்டன் இயக்கத்தில் அத்ரவா, ஹன்சிகா இணைந்து நடிக்கும் படம் ‘100’. ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் மே 3-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் திடீரென்று ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி அதர்வாவின் ‘100’ மே 9-ஆம் தேதிதான் வெளியாகும். இதனை படக்குழுவினர் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இசைக்கு சாம் சி.எஸ்., ஒளிப்பதிவுக்கு கிருஷ்ணன் வசந்த், படத்தொகுப்புக்கு ரூபன் என்று கூட்டணி அமைத்து சான் ஆண்டன் இயக்கியுள்ள இந்த படத்தில் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

#Atharvaa #SamAnton #AuraaCinemas

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 ட்ரைலர்


;