10 நாட்களில் 130 கோடி ரூபாய் அள்ளிய படம்!

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘காஞ்சனா-3’ 10 நாட்களில் 130 கோடி வசூல்!

செய்திகள் 29-Apr-2019 12:00 PM IST Top 10 கருத்துக்கள்

கடந்த 19-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான படம் ‘காஞ்சனா-3’. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த இந்த படத்தில் அவருடன் வேதிகா, ஓவியா, கோவை சரளா, ஸ்ரீமன் உட்பட பலர் நடித்திருந்தனர். ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிம் பெரும் வரவேற்பு கிடைத்து வெற்றிப் படமாக அமைந்துள்ள நிலையில் வசூல் குவித்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 10 நாட்களான நிலையில் உலக அளவில் 130 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இன்னும் இப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, வரும் நாட்களில் இந்த படம் இன்னும் சில கோடிகளை வசூல் செய்ய வாய்ப்பிருக்கிறது. இந்த வசூலால் ‘காஞ்சனா-3’ குழுவினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

#RaghavaLawrence #Lawrence #Kanchana3 #Vedhika #Oviya

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு சட்டை ஒரு பல்பம்


;