‘தர்பார்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரிக்கெட் விளையாடிய ரஜினி!

‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வர, ஷுட்டிங் ஸ்பாட்டில் கிரிக்கெட் விளையாடிய ரஜினிகாந்த்!

செய்திகள் 26-Apr-2019 3:48 PM IST Top 10 கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ‘யோகி’ பாபு, நிவேதா தாமஸ் முதலானோர் நடிக்கும் படம் ‘தர்பார்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற 10ஆம் தேதி மும்பையில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘தர்பார்’ படப்பிடிப்பு துவக்கிய நாளிலிருந்தே படப்பிடிப்பு குழுவினரின் மிகுந்த பாதுகாப்பையும் மீறி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படுகிற சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இன்றும் சில புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் ஒரு புகைப்படத்தில் ரஜினியும், ‘யோகி’ பாபுவும் கிரிக்கெட் விளையாடுவது மாதிரியும், அருகில் நயன்தார இருப்பது மாதிரியுமான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ரஜினி இப்படி கிரிக்கெட் விளையாடுவது நிஜத்தில் படத்திற்காக ஆடுகிறாரா இல்லை, சும்மா பொழுதுபோக்கிற்காக ரஜினியும் யோகி பாபுவும் கிரிக்கெட் விளையாடினாரா என்பது தெரியவில்லை! இது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .

#Rajini #Nayanthara #YogiBabu #Darbar #Superstar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;