விஜய், பிரபுதேவா படத்தின் புதிய அறிவிப்பு!

விஜய் இயக்கத்தில்  பிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி-2’ மே 31-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 26-Apr-2019 3:05 PM IST Top 10 கருத்துக்கள்

‘தேவி’ படத்தை தொடர்ந்து இயக்குனர் விஜய், பிரபுதேவா, தமன்னா மீண்டும் கூட்டணி அமைத்துள்ள படம் ‘தேவி-2’. இந்த படம் ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதே நாளில் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவான ‘வாட்ச்மேன்’ படமும் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாக, ஒரே நாளில் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டு படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய்யின் ‘வாட்ச்மேன்’ அறிவித்தபடி சென்ற 12-ஆம் தேதி வெளியானது. ‘தேவி-2’ படத்தின் ரிலீஸை தள்ளி வைத்தார்கள். இப்போது ‘தேவி-2’ படம் மே 31-ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ள்னர். சென்சாரில் ‘U’ சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ள ‘தேவி-2’ படத்தில் பிரபுதேவா, தமன்னாவுடன் நந்திதா ஸ்வேதா, கோவை சரளா, சதீஷ், நாசர், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாம்.சி.எச். இசை அமைக்க, ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படம் வெளியாகும் அதே தினம் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘NGK’ படமும் வெளியாக இருக்கிறது.

#Suriya #Devi2 #Vijay #PrabhuDeva #Tamannaah #NGK

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிந்துபாத் ட்ரைலர்


;