ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’

அறிமுக இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் ‘மெய்’

செய்திகள் 26-Apr-2019 12:48 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கும் படம் ‘மெய்’. இந்த படத்தில் கதாநாயகனாக நிக்கி சுந்தரம் அறிமுகமாகிறார். இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன், இயக்குனர்கள் சித்திக், ஜித்து ஜோசஃப் ஆகியோரிடம் பணிபுரிந்தவராம். மனிதர்களின் உயிர் காக்கும் மருத்துவத் துறையில் மலிந்து போய் கிடக்கும் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதையமைப்புக் கொண்ட படமாம் இது!

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நிக்கி சுந்தரம் ஆகியோருடன் சார்லி கிஷோர் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அனில் ப்ருத்வி குமார் இசை அமைக்கிறார். கலை இயக்கத்தை செந்தில் ராகவன் கவனிக்க, சண்டை காட்சிகளை மகேஷ் மாத்யூ அமைக்கிறார். ‘பில்லா-2’, ‘பாபநாசம்’ உட்பட பல படங்களை தயாரித்த ‘வைட் ஆங்கிள்’ நிறுவனமும், சுந்தரம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார். இந்த படத்தின் டீஸர் நாளை வெளியாக இருக்கிறது.

#AishwaryaRajesh #Mei #SABaskaran #NickySundaram #Kishore

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெண்ணிலா கபட்டி குழு 2 டீஸர்


;