அருள்நிதி பட வரிசையில் வெளியாகும் அதர்வா படம்!

அதர்வா ஹன்சிகா நடிக்கும்  ‘100’ படத்தின் சென்சார் ரிசல்ட்!

செய்திகள் 25-Apr-2019 2:33 PM IST Top 10 கருத்துக்கள்

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா நடிக்கும் படம் ‘100’. ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் மே 3-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் சென்சார் காட்சி நடைபெற, படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பூமராங்’ படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மே 3-ஆம் தேதி அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகியுள்ள ‘K-13’ திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இந்த படமும் ‘U/A’ சர்டிஃபிக்கெட்டுடன் வெளியாக இருக்கிறது. இதனால் அருள்நிதி படமும் அதர்வாவின் ‘100’ படமும் ஒரே சென்சார் ரிசல்ட்டுடன் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.

#Atharvaa #Hansika #100theMovie #SamCS #SamAnton #AuraaCinemas

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 ட்ரைலர்


;