ஹிந்தியில் ‘ரீ-மேக்’காகும் விஜய்சேதுபதி படம்?

தியாகராஜன் குமாரராஜா  இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ ஹிந்தியில் ரீ-மேக்காகிறது!

செய்திகள் 25-Apr-2019 11:24 AM IST Top 10 கருத்துக்கள்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஃபஹத் ஃபாசில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்த படம் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகி பெரும் கவனம் பெற்ற இந்த படம் இப்போது ஹிந்தியில் ரீ-மேக்காக இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்தியிலும் தியாகராஜன் குமார ராஜாவே இயக்க, பிரபல பாலிவுட் பட நிறுவனம் ஒன்று இப்படத்தை தயாரிக்க இருக்கிறதாம். இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

#SuperDeluxe #VijaySethupathi #ThiagarajanKumararaja #FahadhFazhil #Samantha #Gayathrie #YuvanShankarRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஓ! பேபி Teaser


;