‘தேவராட்டம்’ ஜாதி பற்றிய படமல்ல! – இயக்குனர் முத்தையா

கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிக்கும் ‘தேவராட்டம்’ ஜாதி பற்றிய படமல்ல, குடும்ப உறவுகள் பற்றிய படம்!

செய்திகள் 24-Apr-2019 3:32 PM IST Top 10 கருத்துக்கள்

‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடி வீரன்’ ஆகிய படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கியுள்ள படம் ‘தேவராட்டம்’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க இவர்களுடன் ‘போஸ்’ வெங்கட், சூரி, வேலா ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் மே 1-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இன்று காலை இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது இயக்குனர் முத்தையா படம் குறித்து பேசும்போது,

‘‘இந்த படத்திற்கு ‘தேவராட்டம்’ என்று தலைப்பு வைத்திருப்பதால் இது ஜாதி சம்பந்தப்பட்ட படம் என்று நினைக்கிறார்கள். நிறைய பேர் என்னிடம் இது பற்றி கேட்கவும், செய்தார்கள். ‘தேவராட்டம்’ என்பது ஒரு ஆட்டக்கலை. எல்லா ஜாதியினரும் ஆடக்குடிய ஒரு கலை தேவராட்டம்! இந்த தலைப்பு இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் அந்த தலைப்பை வைத்திருக்கிறேன். மற்றபடி இது ஜாதி சம்பந்தப்பட்ட கதை அல்ல! ஒரு அக்காவுக்கும், தம்பிக்கும் இடையில் உள்ள அழகான உறவைச் சொல்லும் கதை இது. படத்தின் கதைப்படி இந்த படத்தில் கௌதம் கார்த்திக்க்கு 6 அக்காக்கள்! இவர்களுக்குள் சுற்றிச்சுழலும் குடும்ப கதைதான் ‘தேவராட்டம்’.

நான் இயக்கிய அனைத்து படங்களும் குடும்ப உறவுகளை மையப்படுத்தியே எடுக்கப்பட்டிருக்கும். அந்த வரிசையில் இப்படமும் குடும்ப உறவை சொல்லும் படம்தான். குடும்ப உறவு முறைகள் ஸ்ட்ராங்காக இருந்தால் தவறுகள் நடக்காது என்பதை இப்படத்தின் மூலம் சொல்ல வந்திருக்கிறேன். ஒரு காலத்தில் பெண் பிள்ளைகள் வளர்ந்துவிட்டால் அவர்களை அவர்களது சகோதரர்கள் கூட தொட மாட்டாரகள்! ஆனால் இப்போது நம் பெண் பிள்ளைகளை தெருவில் போகிறவர்கள் எல்லாம் எந்த பயமும் இல்லாமல் தொடும் அளவுக்கு சமூகத்தில் சீர்கேடுகள் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சமூக அவலங்களுக்கு கூட உறவு முறைகள் சரியாக இல்லாததுதான் காரணம் என்பது என் கருத்து! அப்படி தவறு செய்கிறவர்களை தட்டி கேட்கிறவர்தான் இப்படத்தின் கதாநாயகைன் வெற்றி! அக்காவா, தங்கச்சியா யாராக இருந்தாலும் பெண்களை மதிக்கணும், அவர்களுக்கு மரியாதை கொடுக்கணும். அதற்கு ஏற்றமாதிரி இப்படத்தில் வரும் ஒரு வசனம்தான், ‘மண்ணை தொட்டவனை கூட விட்டுவிடலாம், அனால் பெண்ணை தொட்டவனை எந்த காரணத்தைக் கொண்டும் விட்டு விடக்கூடாது’’ என்பது. அதை குடும்ப உறவுகள், சென்டிமெண்ட், அடிதடி கலந்து சொல்லியிருக்கிறேன்’’ என்ற இயக்குனர் முத்தையா மீண்டும், ‘‘தேவராட்டம் ஜாதி சம்பந்தப்பட்ட படம் அல்ல, குடும் உறவுகளைச் சொல்லும் படம்’’ என்று மீண்டும் வலியுறுத்தினார்.
#GauthamKarthik #ManjimaMohan #Soori #NivasKPrasanna #MMuthaiah #DevarattamPressMeetPhotos #Devarattam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;