த்ரிஷா படத்தில் இணையும் இசை பிரபலம்?

‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’ படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்!

செய்திகள் 24-Apr-2019 3:21 PM IST Top 10 கருத்துக்கள்

‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’, ‘வலியவன்’ ஆகிய படங்களை தொடர்ந்து சரவணன் இயக்கும் படம் ‘ராங்கி’. இப்படம் கதாநாயகியை மையப்படுத்திய கதை என்று கூறப்படுகிறது. கதாநாயகி கேரக்டரில் த்ரிஷா நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க இருக்கிறார் என்றும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ‘லைக்கா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் கதை, வசனத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதுகிறார். இந்த படத்தில் த்ரிஷாவுடன் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது என்றும், அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

#Trisha #Anirudh #Raangi #ARMurugadoss #MSaravanan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பரமபதம் விளையாட்டு - ட்ரைலர்


;