இரண்டாவது கட்ட படப்பிடிப்பை துவங்கிய ‘ஹீரோ’

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு துவங்கியது!

செய்திகள் 23-Apr-2019 11:46 AM IST Top 10 கருத்துக்கள்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மிஸ்டர் லோக்கல்’ மே 16-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிகுமார் இயக்கும் பெயரிடப்படாத சயன்ஸ் ஃபிக்‌ஷன் படம், ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நிறைவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கியுள்ளது. இந்த தகவலை இப்படத்தை தயாரிக்கும் ‘கோட்டபடி’ ராஜேஷின் ‘KJR STUDIOS’ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. அந்த பதிவில் முதல்கட்ட படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ‘ஹீரோ’ படத்தின் காட்சிகள் அற்புதமாக வந்துள்ளது என்ற தகவலையும் பகிர்ந்துள்ளனர்.

இயக்குனர் பி.எஸ்.மித்ரனுடன் ‘இரும்புத்திரை’யில் இணைந்து பணீயாற்றிய இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் ஜார்ஜ், படத்தொகுப்பாளர் ரூபன் ஆகியோர் ‘ஹீரோ’விலும் இணைந்துள்ளனர். ‘ஹீரோ’ படத்தில் சிவகார்த்திகேயனுன் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்சன் நடிக்கிறார். இவர்களுடன் ‘நாச்சியார்’ படப்புக்ழ இவானா, அர்ஜுன் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

மேற்குறிப்பிட்ட படங்கள் தவிர சிவகார்த்திகேயன் பாண்டிராஜ், விக்னேஷ் சிவன் ஆகியோரது இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.

#HERO #Sivakarthikeyan #SK #PSMithran #KalyaniPriyadharsan #KJRStudios

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மிஸ்டர். லோக்கல் - ட்ரைலர்


;