ரஜினியின் ‘தர்பாரி’ல் இணைந்த நயன்தாரா!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தில் இணைந்த நயன்தாரா!

செய்திகள் 23-Apr-2019 11:10 AM IST VRC கருத்துக்கள்

ரஜினியும் ஏ.ஆர்.முருகதாஸும் முதன் முதலாக இணைந்துள்ள ‘தர்பார்’ படத்தின் படபிடிப்பு சமீபத்தில் மும்பையில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். காமெடி கேரக்டரில் யோகி பாபு நடிக்கிறார். இந்நிலையில் மும்பையில் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் நயன்தாரா கலந்துகொண்டு நடிக்கிறார் என்ற தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். ஏற்கெனவே ரஜினி நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி’, ‘குசேலன்’ ‘சிவாஜி’ ஆகிய படங்களில் நடித்துள்ள நயன்தாரா நான்காவது முறையாக ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தில் இணைந்துள்ளார். ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க , ந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கவனிக்க, சண்டை காட்சிகளை ராம்-லக்‌ஷமண் கவனிக்கிறார்கள். ‘தர்பார்’ 2020 - பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#Darbar #DARBAR #Rajinikanth #Superstar #ARMurugadoss #ARM #Nayantara #Nayanthara #LycaProductions

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேட்ட ட்ரைலர்


;