வைபவுக்கு வில்லனான வெங்கட் பிரபு!

நிதின் சத்யா தயாரிக்க, வைபவ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் வெங்கட் பிரபு வில்லனாக நடிக்கிறார்!

செய்திகள் 22-Apr-2019 11:05 AM IST VRC கருத்துக்கள்

‘ஜருகண்டி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தவர் நடிகர் நிதின் சத்யா. தனது ‘ஷ்வேத்- எ நிதின் சத்யா புரொடக்‌ஷன் ஹவுஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ‘ஜருகண்டி’ படத்தை தயாரித்த நிதின் சத்யா இரண்டாவதாக தயாரிக்கும் படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வாணி போஜன் நடிக்கிறார். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், பூர்ணா, ‘மைம்’ கோபி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் வைபவ் போலீஸ்காரராக நடிக்க, இவரை தெறிக்க விடும் வில்லனாக வெங்கட் பிரபு நடிக்கிறார். வைபவ் போலீஸ் அதிகாரியாக நடிப்பதும், வெங்கட் பிரபு வில்ல்னாக நடிப்பதும் இதுவே முதல் முறையாகும்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது, இந்த படத்தை இயக்குனர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய S.G.சார்லஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்தது என்றும் இப்படத்திற்கு அரோல் கரோலி இசை அமைக்க, ஒளிப்பதிவை சந்தானம் சேகர் கவனிக்க, படத்தொகுப்பை ஜெரால்ட் ஆனந்த் கவனிக்கிறார் என்றும், இப்படத்தின் டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியாக இருக்கிறது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். .

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டான டீஸர்


;